பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளான மாங்கரை, சின்னத்தடாகம், பெரியதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேய்தப்படுத்திச் செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...