கோவை TNAU-வில் நறுமணப் பொருள்கள் விற்போர் – வாங்குவோர் சந்திப்பு

தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம் என்று வேளாண் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.


கோவை: கொச்சி நறுமணப் பயிர்கள் வாரியமும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வணிக மேம்பாட்டு இயக்ககமும் இணைந்து நறுமணப் பொருள்கள் விற்போர்- வாங்குவோர் சந்திப்பு நிகழ்ச்சி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்.15) நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் செயலா் டி.சத்தியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பேசியதாவது, உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்ட நிலையில், விவசாயிகளை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் மலைப் பகுதிகளில் குங்குமப்பூவை பயிர் செய்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காஷ்மீரில் உள்ள ஷோ் இ காஷ்மீா் வேளாண் அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, அங்கிருந்து விதைக் கிழங்குகளைப் பெற்று வந்து உதகை, கொடைக்கானல், ஏற்காடு, தடியன்குடிசை (வத்தலகுண்டு) மலைப் பகுதிகளில் பயிரிட்டு சோதனை நடத்தி வருகிறோம்.

பசுமைக் குடில்களிலும், குளிரான மலைப் பகுதிகளிலும் நாம் பயிரிட்ட குங்குமப்பூ நன்றாக விளைந்திருக்கிறது. காஷ்மீரில் விளையக் கூடிய குங்குமப்பூவுக்கும் இங்கு விளையக் கூடிய பூவுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன, சரியான தரத்தில் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன.

நல்ல தரமான குங்குமப்பூவாக இருக்கும்பட்சத்தில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி பரவலாக பயிரிட ஊக்குவிக்கப்படும். அதேபோல, தாளவாடி பகுதியில் ரோஸ்மேரி உள்ளிட்ட மூலிகை நறுமணப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறோம். கன்னியாகுமரி கிராம்பு, ஈரோடு மஞ்சள், ஆலப்புழை பச்சை ஏலக்காய், மலபார் மிளகு, ராமநாதபுரம் முண்டு மிளகாய், கொடைக்கானல் மலைப்பூண்டு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து விருதுநகா் சம்பா மிளகாய், விளாத்திக்குளம் முண்டு மிளகாய் வற்றல், காரமடை செங்காம்பு கறிவேப்பிலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் இயக்குநா் ஏ.பி.ரேமா ஸ்ரீ, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநா் இ.சோமசுந்தரம், நறுமணப் பயிர் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...