கோவையில் நாளை முதல் சிறப்பு வரிவசூல் முகாம் – மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவிப்பு

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி இட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வருகினங்களை செலுத்த மாநகராட்சி வார்டு பகுதிகளில் பிப்ரவரி 17, 18-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.


கோவை: 2023-2024 நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி இட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வருகினங்களை செலுத்த மக்களின் வசதிக்காக மாநகராட்சி வார்டு பகுதிகளில் பிப்ரவரி 17, 18-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி, மேற்கு மண்டலத்தில் 35-வது வார்டில் லட்சுமி நகர், இடையார்பாளையம் அண்ணா நகர், செக் போஸ்ட் எதிர்புறம் விநாயகர் கோயில் வளாகம், 42வது வார்டு கோவில் மேடு வளாகம், 74வது வார்டு நாயக்கர் தோட்ட சமுதாயக்கூடம், 33வது வார்டு எஸ்.கே.ஆர்.நகர் சமுதாயக்கூடம்.

கிழக்கு மண்டலத்தில் 7 மற்றும் 8வது வார்டு பகுதிகளில் நேரு நகர் கிழக்கு, 24வது வார்டு குருசாமி நகர், 56வது வார்டு ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம், 57வது வார்டு நெசவாளர் காலனி.

தெற்கு மண்டலத்தில் 97வது வார்டு பிள்ளையார்புரம், 100வது வார்டு மேட்டூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. வடக்கு மண்டலத்தில் 15வது வார்டு சுப்பிரமணியம் பாளையம் அங்கன்வாடி மையம், 19வது வார்டு மணியக்காரம்பாளையம் அம்மா உணவகம், 25வது வார்டு காந்தி மாநகர் அரசு ஆரம்ப பள்ளி.

மத்திய மண்டலத்தில் 32 வது வார்டு நாராயணசாமி வீதியில் உள்ள சிறுவர் பூங்கா, 62வது வார்டு பெருமாள் கோயில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 84வது வார்டு ஜி.எம் நகரில் உள்ள தர்ஹத் இஸ்லாம் ஆரம்ப பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளன என கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று (பிப்.15) தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...