மோடி அரசின் தேர்தல் பத்திர மெகா ஊழலை கண்டித்து பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

2022 -2023 ஆண்டில் மட்டுமே தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூபாய் 20,120 கோடியை பாஜக அரசு பெற்றுள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியுள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளூர் திடலில் மத்திய அரசு மோடியின் ஆட்சியில் தேர்தல் பத்திர மெகா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்றது.



இதில் பாஜக சார்ந்த கம்பெனிகளுக்கு சலுகைகள் வழங்கி அதற்கு கைமாறாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.5,270 கோடி வசூல் செய்து தேர்தல் பத்திர திட்டங்களை காங்கிரஸ் கட்சி எதிர்த்த போதும் இந்தத் தொகை யாரிடம் பெறப்பட்டது என்பதை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்க முடியாத அளவிற்கு சட்ட திருத்தத்தை மோடி அரசு செய்துள்ளது. 2022 -2023 ஆண்டில் மட்டுமே தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூபாய் 20,120 கோடியை பெற்றுள்ளது.

இதனை உச்ச நீதிமன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே மோடி அரசின் தேர்தல் பத்திரமான ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகரத் தலைவர் செந்தில்குமார், மாநில பொது குழு உறுப்பினர் ஜோதிமணி, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் ரவி உட்பட ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...