உடுமலையில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்தார் டிஎஸ்பி சுகுமாறன்

10 வயதிற்கு உட்பட்டோருக்கு சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சைலாத் சிலம்பச் சங்கம் நடத்தும் 4-வது ஆண்டு திருப்பூர், கோவை மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி நடைபெற்றது. உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் தொடங்கிய இந்த நிகழ்வுக்கு லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி, அறக்கட்டளை நிறுவனர் கே. ஆர்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆசான் வீரமணி வரவேற்றார். போட்டியை உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தொடக்கி வைத்தார்.



போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்ட பிரிவு, சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 650 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பூர்,கோவை மாவட்ட சைலாத் சிலம்ப சங்கம் மற்றும் லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...