தடாகம் சாலையில் புதிய சோதனைச் சாவடியை திறந்து வைத்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்பட வேண்டும் எனவும், மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தடாகம் சாலையில் உள்ள காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் தனியார் பங்களிப்புடன் சுமார் 6 லட்சம் செலவில் புதிய சோதனைச் சாவடி கட்டப்பட்டது.

இதில் நம்பர் பிளேட் எண்களை துல்லியமாக பதிவு செய்யும் சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணன் குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்படு வேண்டும். மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...