உடுமலை வழியாக செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயில் வாஞ்சி மணியாச்சி வரை 28ஆம் தேதி வரை செல்லும் என அறிவிப்பு

வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் வருகின்ற 28-ம் தேதி வரை பாலக்காட்டில் இருந்து செல்லும் ரெயில் வாஞ்சி மணியாட்சி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்கு கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து நாள்தோறும் ரெயில் இயக்கப்படுகிறது. பாலக்காட்டில் புறப்படும் இந்த ரயிலானது பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி வழியாக திருச்செந்தூரை சென்றடைகிறது.

இதில் நாள்தோறும் தென் மாவட்டங்கள் மற்றும் கோவிலுக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 21-ம் தேதி முதல் வருகின்ற 28-ம் தேதி வரை பாலக்காட்டில் இருந்து செல்லும் ரெயில் வாஞ்சி மணியாட்சி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...