வால்பாறையில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.2 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கியது. வால்பாறை பகுதியில் இருந்து சோலையார் எஸ்டேட் வரை நகராட்சி சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது இச்சாலை தற்போது கொண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது.

புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.

இதை வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், துணை பொறியாளர் கோகிலா, பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், வால்பாறை திமுக நகரச் செயலாளர் சுதாகர், சரவண பாண்டியன் 14வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், பன்னிரெண்டாவது வார்டு உறுப்பினர் அன்பரசன், ஒப்பந்ததாரர் ரமேஷ், விசிடி ரவி மற்றும் மீசை குமார், ராதா, ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...