பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி அருகே காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த குட்டியானையை காப்பாற்றிய வனத்துறையினர்


கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் உள்ள காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிப்பதற்காக நேற்றுமாலை இறங்கிய யானை குட்டி ஒன்று தவறி விழுந்தது. இதை காப்பாற்றுவதற்காக தாய் யானையும் கால்வாயில் இறங்கியது. நீண்ட நேரம் போராடியும் தாய் யானை குட்டி யானையை காப்பாற்ற முடியாத நிலையில் அதிக சத்தம் எழுப்பியது.



இது இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது தாயும் குட்டி யானையும் கால்வாயில் இருப்பதை வனத்துறை ஊழியர்கள் பார்த்தனர். குட்டி யானையுடன் தாய் யானை இருப்பதை பார்த்த வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையை காப்பாற்ற காத்திருந்த நிலையில் தாய் யானை சற்று தொலைவில் சென்றவுடன் கால்வாயில் இறங்கி குட்டி யானையை காப்பாற்றி கரைப்பகுதியில் விட்டனர். இதனை அடுத்து கன்றும் தாயும் மீண்டும் இணைந்து சென்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...