வருங்கால இந்தியா வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும் - கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட கூட்டத்தில், கலந்து கொள்ள வந்த என்னை தமாக தொண்டர்கள் திரளாக வரவேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான தமாக தொண்டர்கள், தலைவர்களோடு இணைந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். வரும் கால இந்தியா மிக உயர்ந்த, மதிப்புக்குறிய, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும்.

அந்த உயர்ந்த நிலைக்கு கடந்த 10 ஆண்டு பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக இந்த தேர்தலில் அமையும்.

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு களப்பணி அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...