உடுமலை அருகே அமராவதி நகரில் மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் – காவல்துறை விசாரணை

பயிற்சி மையத்தில் ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி நகரில் குடியிருந்து வருபவர் தேவி(37). இவரது கணவர் பிரபு ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.



அவர்கள் இருவரையும் அமராவதி நகரில் உள்ள விவேகானந்தா பயிற்சி மையத்தில் சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பயிற்சி மைய ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவர் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.



அதைத் தொடர்ந்து தேவி தனது மகனை அமராவதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அத்துடன் அமராவதி நகர் காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.



அதன் பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவன் தாயார் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் வருகின்றது.

வீடியோவில் கூறியதாவது, நான் குழந்தைகளை சைனிக் எனப்படும் ராணுவ பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் விவேகானந்த பயிற்சி மையத்தில் சேர்த்து இருந்தேன். நான் ஒரு வருடமாக குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்றும், முடிந்த அளவு படிக்கட்டும் என்றும் கூறியிருந்தேன். நான் சொன்னதையும் கேட்காமல் நேற்று முன்தினம் கோச்சிங் சென்டர் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் எனது மகனை அடித்து உள்ளார்.

இதனால் எனது மகனுக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எனது மகனை அமராவதி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுடன் அமராவதி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளேன். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்று பாதிக்கப்பட்ட மாணவன் தாய் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. உடுமலை அருகே மாணவனை பயிற்சி மைய ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...