கோவை ஆயுதப்படை பிரிவு தலைமை காவலருக்கு அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி பாராட்டு

பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த செந்தில்குமார் மிகவும் சிறப்பாக பணியாற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி பாராட்டி அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.


கோவை: மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி கடந்த 14-ந் தேதி கோவை வந்தார். இவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் செந்தில் குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி 3 நாட்கள் கோவையில் இருந்து விட்டு கடந்த 16- ந்தேதி மும்பை திரும்பினர். அப்போது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த செந்தில்குமார் மிகவும் சிறப்பாக பணியாற்றியதாக அவர் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.

இதையடுத்து தலைமை காவலர் செந்தில் குமார் அந்த பதக்கம் மற்றும் சான்றிதழை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...