உடுமலை அருகே தலையார் என்ற இடத்தில் அரசு பேருந்தை வழி மறித்து மதம்பிடித்த யானை தாக்குதல்- பயணிகள் அலறல்

நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்ததால் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக கேரள எல்லை பகுதியான மறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாக படையப்பா என்ற யானை மதம் பிடித்து சுற்றி வருகின்றது .இந்த நிலையில் நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டது.



அப்போது பேருந்தில் இருந்த மக்கள் கடும் கூச்சலிட்டனர். இருப்பினும் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை யானை தாக்கியதால் சேதம் அடைந்தது. உடுமலை அருகே அரசு பேருந்தை யானை வழிமறித்து தாக்குதல் நடத்திய காரணத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் நடுவழியில் கடும் அவதி அடைந்தனர்.



இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வரும் நிலையில் மதம்பிடித்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...