பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கிய இஸ்லாமியர்கள்

கோட்டூர் சாலையில் அமைந்துள்ள ஷாபியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் உறவினர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்களை வழங்கினர்.


கோவை: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் பூவோடு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.



CTC காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீச்சட்டி எடுத்து வந்தபோது கோட்டூர் சாலையில் அமைந்துள்ள ஷாபியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் மத நல்லினத்தை வலியுறுத்தியும், இந்து இஸ்லாமியர் என்ற மத வேறுபாடுகளை கலைந்து தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் உறவினர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்களை வழங்கி தாகம் தனித்து வழி அனுப்பி வைத்தனர்.

இதை மகிழ்வுடன் பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...