பொள்ளாச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ராணுவத்தில் கூட ஒப்பந்தத்தை வழங்கி மிக கேவலமான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையும் இணைப்பு விழா நிகழ்ச்சி வெங்கட்ரமணன் பள்ளி வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



அவர்களை கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர் .

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என கூறினார். ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ராணுவத்தில் கூட ஒப்பந்தத்தை வழங்கி மிக கேவலமான ஆட்சி நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். ராகுல் காந்தி நடைபயணத்துக்கு பிறகு எழுச்சியோடு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...