உடுமலையில் பட்டா மாறுதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம்-துண்டு விரித்து வட்டாச்சியர் அலுவலகம் முன்பு விவசாயி பிச்சை எடுக்கும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும் 20-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் வேலைக்கு வரவில்லை. இதனால் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஊராட்சி இந்திராநகர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்ற விவசாயி பட்டா மாறுதல் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தினமும் அதிகாரிகள் தட்சிணாமூர்த்தியை அலைக்கழித்தாக கூறப்படும் நிலையில் இன்று வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கேட்டபோது அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நபர் ஒருவர் விண்ணப்பத்தை தூக்கி எறிந்தாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தட்சிணாமூர்த்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துண்டு விரித்து பட்டா மாறுதல் செய்ய வருவாய்த் துறையினருக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வருவாய்த் துறையினர் விரைவில் பட்டா மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கூறியதால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

வருவாய்த்துறையினர் கூறும் பொழுது. தற்சமயம் தமிழக முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும் 20-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் வேலைக்கு வரவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பணியில் உள்ள அதிகாரிகளை வைத்து கள ஆய்வு மேற்கொண்டு பட்டா மாறுதல் செய்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பட்ட் மாறுதல் வழங்க அதிகாரிகள் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி விவசாயிகள் துண்டு விரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...