தாராபுரம் அருகே மோளரபட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - நள்ளிரவில் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்

மோளரப்பட்டி பகுதிக்கு கொண்டுவரப்படும் டாஸ்மார்க் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என ஊர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் ஒன்றியம் மோளரபட்டி ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மோளரபட்டி ஊர் பொதுமக்கள் இரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தவர்கள் டாஸ்மார்க் மேலாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் திடீரென தாராபுரம்-பூளவாடி சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மோளரபட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் மனோகரன் தெரிவிக்கையில், தேர்பாதை கிராமத்தில் அரசு டாக்ஸ்மார்க் கடை ஏற்கனவே கடை எண் 3830 என்ற பெயரில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள உப்பாறு அணை - தாராபுரம் செல்லும் மெயின் சாலையில் இயங்கி வருகிறது. அங்கு தற்போது நடந்து வரும் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர்.

அதன் பிறகு தேர்பாதை கிராமத்தில் தற்போது செயல்பட்டு வரும் பிரச்சனைக்குரிய டாஸ்மார்க் கடையை மோளரப்பட்டி கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்காக தனியார் விவசாய நிலத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே டாஸ்மார்க் மேலாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்திருந்தோம்.

மேலும் இங்கு அருகாமையில் கோவில், பள்ளிக்கூடம் உள்ளது. மேலும் மோளரப்பட்டி பிரதான சாலையாக உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் விவசாய வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே இங்கு டாஸ்மார்க் கடையை அமைப்பதால் ஊர் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவே மோளரப்பட்டி பகுதிக்கு வரும் டாஸ்மார்க் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் இரவு பகலாக பொதுமக்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் கட்சி அரசியல்வாதிகள், ஒன்றிய செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோர் சுய லாபத்திற்காக அதிகாரிகள், துணை போனால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...