கோவை பெரியநாயக்கன்பாளையம் புதிய மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: தேசத்தின் முக்கிய நகரங்களை இணைக்கிற வகையிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.11) துவக்கி வைத்தார்.

அதன்படி கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் J. ராமகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தல் படி மாவட்ட பொது செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்டத் துணைத் தலைவர் மகாலட்சுமி. கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட செயலாளர் சௌந்தர்ராஜன், பெரியநாயக்கன்பாளையம் மண்டல் தலைவர்கள் மகேந்திரன், ஜெயபிரகாஷ் புவனேஸ்வரன் ஆகியோருடன் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்கள்.

மேலும் இதேபோல 905 கோடி ரூபாய் மதிப்பில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலைப் பணி அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், இவற்றை உள்ளடக்கி 3200 கோடி ரூபாய் மதிப்பிலானபணி நிறைவடைந்தவற்றை திறந்து வைத்ததோடு, அடிக்கலும் நாட்டினார்.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில், 112 நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...