கோவை கோவில்பாளையத்தில் இரத்தினம் கல்லூரி துவக்கம்

கல்வி வளாகம் வெறும் கட்டிடமாக அல்லாமல் மாணவர்களின் கற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் ஒரு இடமாக விளங்கும் என்று இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் கல்லூரி துவக்க விழாவில் பேசினார்.


கோவை: கோவை மாநகரின் மத்தியில் 50 வருடத்துக்கும் மேலாக கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் இரத்தினம் கல்விக் குழுமங்கள் சார்பில் கோவில்பாளையத்தில் இரத்தினம் டிப்ஸ் குளோபல் கல்லூரி திறக்கப்பட்டது. விழாவிற்கு இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில், இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் இரா.மாணிக்கம், இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் பா.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் நடிகர் ஆரி அர்ஜுனன், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் பேசுகையில், இந்த கல்வி வளாகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கட்டிடடவியல் கல்லூரி மற்றும் மேலாண்மைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் அமைத்திருப்பதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறனும், பல பிரச்சனைகளுக்கு பல்வேறு கோணங்களில் தீர்வு காணும் திறனும் மேம்படும் என்றும், இந்த கல்வி வளாகம் வெறும் கட்டிடமாக அல்லாமல் மாணவர்களின் கற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் ஒரு இடமாக விளங்கும் என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...