பீளமேட்டில் தொழிலதிபர் வீட்டில் 177 பவுன் நகை, ரூ.9 லட்சம் பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை

பீரோவில் வைத்திருந்த 177 பவுன் தங்க நகை மற்றும் ரூ.9.75 லட்சம் கொள்ளை போயிருப்பது கண்டு தொழிலதிபர் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு செங்காளியப்பாநகரை சேர்ந்தவர் மனோகரன்(64). தொழில் அதிபர். இவரது மனைவி திருச்சியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்களை பார்ப்பதற்காக கடந்த மாதம் 23ம் தேதி திருச்சி சென்ற மனோகரன் அங்கு தங்கினார். இதற்கிடையே நேற்று (மார்ச்.14) அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உடனே மனோகரனை செல்போனில் தொடர்புகொண்டு விவரத்தை கூறினர். உடனே மனோகரன் திருச்சியில் இருந்து கோவை திரும்பி தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு வீட்டில் இருந்த உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

பீரோ திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 177 பவுன் தங்க நகை மற்றும் ரூ.9.75 லட்சம் கொள்ளை போயிருப்பது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் சில நாட்களாக ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மனோகரன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...