நஞ்சியம்பாளையத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள பணியினை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சிவகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, ஒன்றிய அவைத் தலைவர் செல்லமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லமுத்து, தொ.மு.ச. மண்டல தலைவர் துரைசாமி, தேர்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதாகருப்புசாமி, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ரோகிணி ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வீரசுந்தரி சுப்பிரமணி, நகர அவைத் தலைவர் ப.கதிரவன், நகர் மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன், ஸ்ரீதர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...