கோவை சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு

ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.



கோவை: கோவையில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய இந்த ரோடு ஷோ ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்தது.



அப்போது வழி நெடுகிலும் இருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்களுக்கு கைகளை அசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.



நிறைவுப் பகுதியான ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.



அவருடன் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், எச்.ராஜா பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது எஸ்.ஆர். சேகர் சிறிது நேரம் மோடியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இது குறித்து பேட்டியளித்த எஸ்.ஆர். சேகர் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி மோடியிடம் கூறியதாகவும் அப்போது மோடி அது பற்றி தனக்கும் தெரியும் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...