தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக உள்ளது - பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை தமிழகத்தில் வீசுவது உறுதி எனவும் திராவிட கட்சிகள் தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என உடுமலை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேச்சு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வருகின்றது. இந்நிலையில், இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அறிமுக கூட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்பொழுது திமுகவை மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள். அதிமுக சிதறிப் போய் உள்ளது. குறிப்பாக, மன்சூர் அலிக்கான் கூட்டணிக்கு வந்து கூட்டணி வேண்டாம் என்று சொல்லும் நிலையில் அதிமுக உள்ளது. எனவே, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்து வருகின்றது. எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை தமிழகத்தில் வீசுவது உறுதி எனவும், திராவிட கட்சிகள் தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என பேசினார்.



அதனை தொடர்ந்து, உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாநில விவசாய அணி செயலாளர் மௌன குருசாமி மற்றும் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...