கோவை மத்திய சிறையில் சிறை மெகா அதாலத்: 16 பேர் விடுதலை...!

கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூலம், சமரசம் செய்யக் கூடிய சிறு குற்றங்களில் தொடா்புடைய சிறைவாசிகளின் குற்றவழக்குகளுக்கு தீா்வு காணும் வகையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கோவை: உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, நேற்று (மார்ச்.27) கோவை மத்திய சிறையில் சிறை மெகா அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூலம் இந்த 4 மாவட்ட நீதிமன்ற வரம்புகளுக்குள்பட்ட சமரசம் செய்யக் கூடிய சிறு குற்றங்களில் தொடா்புடைய சிறைவாசிகளின் குற்றவழக்குகளுக்கு தீா்வு காணும் வகையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சிறை மெகா அதாலத் நீதிமன்றத்தை, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் முன்னிலையில், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் கே.எஸ்.எஸ்.சிவா தொடங்கி வைத்தாா். 

இதில், கோவை மாவட்ட நீதிமன்ற வரம்புகளுக்குள்பட்ட சிறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சிறைவாசிகளின் வழக்குகளை கோவை நீதித் துறை நடுவா்கள் சந்தோஷ், சுனில் வினோத் ஆகியோா் மூலம் 18 சிறைவாசிகளின் 21 வழக்குகளுக்கும், திருப்பூா் மாவட்ட நீதிமன்ற வரம்புகளுக்குள்பட்ட சிறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சிறைவாசிகளின் வழக்குகளை திருப்பூா் நீதித்துறை நடுவா் முருகேசன் மூலம் 3 வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டன.

மேலும், சிறை மெகா அதாலத் நிகழ்ச்சியில், மொத்தம் 21 சிறைவாசிகளின் 24 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு 16 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனா். மற்ற சிறைவாசிகளுக்கு நிலுவையில் உள்ள பிற வழக்குகளின் காரணமாக அவா்கள் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற மெகா அதாலத் நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட நீதிமன்ற வரம்புக்குள்பட்ட வழக்குகளை விசாரிக்கும் வகையில், பவானி நீதித்துறை நடுவா் பரத்குமாா், நீலகிரி மாவட்ட வழக்குகளை விசாரிக்கும் வகையில் கோத்தகிரி நீதித் துறை நடுவா் வனிதா ஆகியோரும் பங்கேற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...