வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் சந்திரசேகர்

நாம் தமிழர் கட்சியின் வாக்கை பிரிக்க விரும்பவில்லை எனவும், தனது கட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக வேட்பு மனுவை திரும்ப பெற்ற சந்திரசேகர் என்பவர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாவலட்சுமி என்பவர் அறிவிக்கப்பட்டு அவரும் தற்சமயம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படாத சூழலில் மைக் சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. கரும்பு விவசாயி சின்னம் மூலம் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்யினருக்கு இது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மற்றொரு கட்சிக்கு நாம் தமிழர் கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால், குழப்பத்தை ஏற்படுத்தும் என பரவலாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் திருப்பூரில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த சந்திரசேகர் என்ற வேட்பாளர் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வாக்கை பிரிக்க விரும்பவில்லை எனவும், தனது கட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவும் இம்முடிவை எடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதன் மூலம் வாக்குப்பதிவின்போது கரும்பு விவசாயி சின்னம் இடம்பெறாத சூழல் உள்ளது. இதனால் மைக் சின்னத்தை மேலும் கொண்டு சேர்க்கும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் இறங்கி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...