காங்கேயம் பொதுப்பணித்துறை அதிகாரி மிரட்டுவதாக காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார்

குறைவான தண்ணீரே வருகின்றது என்றும், வரும் தண்ணீரின் அளவு எவ்வளவு என தெரிவிக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டபோது தங்களை தொலைபேசியில் தொடர்கொண்டு காங்கேயம் பொதுப்பணித்துறை அதிகாரி மிரட்டியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருமூர்த்தி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வெள்ளகோவில் வரை உள்ள கடைமடை பகுதிக்கு பிஏபி வாய்க்கால் தண்ணீர் வரவில்லை என்று கூறி விவசாயிகள் இரவு காங்கேயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவில் பொதுப்பணித்துறை அதிகாரி மீது காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.



தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் குறைவான தண்ணீரே வருகின்றது என்றும், வரும் தண்ணீரின் அளவு எவ்வளவு என தெரிவிக்கவேண்டும் என அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தொலைபேசியில் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரி மிரட்டல் விடுத்ததாக கூறி காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டலத்தில் 2வது சுற்றி பாயக்கூடிய பிஏபி வாய்க்காலில் பாசன தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் கடைமடைக்கு தற்போது வரை தண்ணீர் வந்து சேரவில்லை. திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 126 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம் சென்னிமலை சாலையில் 6.09 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கடைமடைக்கு உரிய தண்ணீர் வரவில்லை.

எனவே இரண்டாவது சுற்றில் பாயக்கூடிய முதல் 4 ஆயிரம் பரப்பளவு ஏக்கர் பாசன விவசாய பூமி தற்போது வறட்சியை கண்டுள்ளது. எனவே விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மேற்பார்வையிட்ட அதிகாரிகள் முறையான பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தற்போது பிஏபி விவசாயிகள் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...