காங்கேயத்தில் மூத்த‌ குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான முதல் நாள் வாக்கு பதிவு தொடக்கம்

வீடு வீடாக சென்று வாக்கு பெறுவதற்கு முன்பு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் திறந்து சோதனை செய்யப்பட்டு பிறகு எடுத்து செல்லப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் ஆகிய பகுதியில் உள்ள மூத்த‌ குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான முதல் நாள் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது.



வீடு வீடாக சென்று வாக்கு பெறுவதற்கு முன்பு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் திறந்து சோதனை செய்யப்பட்டு பின்னர் எடுத்து செல்லப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று வாக்கு சேகரித்தனர்.



தேர்தல் ஆணைய விதிகளின் படி 85 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த வாக்குபதிவிற்கு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற நுண் பார்வையாளர்கள், காவல் துறையினர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் 9 பிரிவுகளாக பிரித்து அனைத்து பகதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வீடுவீடாக சென்று வாக்காளர்களிடம் வாக்கு பதிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...