பிறந்து 3 நாட்களான ஆண் குழந்தை பிஏபி வாய்க்காலில் இறந்த நிலையில் கண்டெடுப்பு

பொத்தியம்பாளையம் பிரிவில் உள்ள பிஏபி வாய்க்காலில் மிதந்து வந்த பிறந்து மூன்று நாட்களான ஆண் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலை பொத்தியம் பாளையம் பிரிவில் பிஏபி கிளை வாய்க்கால் செல்கிறது. (பரப்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால்). பிறந்து மூன்று நாட்களான ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பொத்தியம் பாளையம் பிரிவில் உள்ள பிஏபி வாய்க்காலில் மிதந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் காங்கேயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் இறந்து அழுகிய நிலையில் தண்ணீரில் மிதந்து வந்த அந்த அடையாளம் தெரிய தெரியாத ஆண் குழந்தையை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து காங்கயம் காவல் ஆய்வாளர் கூறியதாவது,அடையாளம் தெரியாத இந்த குழந்தை எங்கிருந்து தண்ணீரில் அடித்துவரப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் குழந்தையின் பெற்றோர்கள் யார் என்பதையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த குழந்தையை பார்க்கும் பொழுது பிறந்து 2 முதல் 4 நாட்களுக்குள் தான் இருக்கும் என்றும், குழந்தையை கடந்த 24 மணி நேரத்திற்குள் தான் தண்ணீரில் பெற்றோர்கள் வீசி எறிந்து இருக்க முடியும் என்றும் சந்தேகிக்கிறோம்.

மேலும் இந்த குழந்தையை பற்றிய தகவல் யாரேனும் அறிந்திருந்தால் உடனடியாக காங்கயம் காவல் ஆய்வாளர் (விவேகானந்தன் -94981 89123)ஐ அணுக வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...