சிங்காநல்லூரில் 3.55 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்தரை கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் - பறக்கும் படை நடவடிக்கை

பெர்க்ஸ் பள்ளி அருகே உரிய ஆவணம் இல்லாமல், தனியாருக்கு சொந்தமான ஆம்னி காரில் எடுத்தவரப்பட்ட 3.55 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்தரை கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர்.


கோவை: கோவையில் உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச்செல்லப்பட்ட 3.55 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்தரை கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெர்க்ஸ் பள்ளி அருகே பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏம்.வி எக்ஸ்பிரஸ் என்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி காரில் சந்தேகத்தின் பெயரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.



அதில் ஒரு பெட்டியில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அதற்கான ஆவணங்கள் தொடர்பாக ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் தங்க நகைகளை பறிமுதல் செய்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர்.



மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் சுமார் 5 1/2 கிலோ இருக்கும் எனவும், 3.55 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த தங்கம் மற்றும் வைர நகைகள் விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் செல்ல கொண்டு வந்துள்ளதாக விசாரணையில் ஓட்டுநர் கூறியதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது எனவும், உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...