வடவள்ளி பகுதியில் செல்பி எடுத்ததை காட்டி பெண்னை பாலியல் உறவுக்கு அழைத்த நபர் கைது..!

வடவள்ளி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவரது கடை அருகே இருந்த பெண்ணிடம், செல்ஃபி புகைபடத்தை காட்டி பாலியல் உறவுக்கு வருமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். விசாரணையில், அவர் மீது வழக்கு தொடர்ந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


கோவை : கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி.. இவர் அப்பகுதியில் டீக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் எதிரே 46 வயது பெண் ஒருவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள்ளார்.

இந்த நிலையில்,இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி போட்டோவை அந்த பெண்ணிடம் காட்டி பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்து கருப்பசாமி டார்ச்சர் கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து கருப்பசாமியை கண்டித்து வந்துள்ளார்.

இதற்கிடையே அந்த பெண் தனது கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது,அங்கு வந்த கருப்பசாமி அவரிடம் மீண்டும் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது . சம்பவம் குறித்து அப்பெண் வடவள்ளிகாவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...