உடுமலையில் கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் 11 ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா கொண்டாட்டம்

யுகாதி விழாவைமுன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டி, பேச்சு போட்டி, தண்ணீர் நிரப்புதல் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்கா கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் 11 ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக ஹயக்கீரிவர் பூஜைகளும், குழந்தைகளின் பெயரில் அர்ச்சனைகளும் செய்யப்பட்டது. மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்திட சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கோலப்போட்டி, பேச்சு போட்டி, தண்ணீர் நிரப்புதல் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.



தலைமை சங்க நிர்வாகிகள் தலைவர் அரிமா லோகநாதன், செயலாளர் ராமதுரை, பொருளாளர் ஜெகநாதன்,தலைமை செயலாளர் முருகேசன், நிர்வாக ஆலோசகர் சுப்புராமன், துணைத் தலைவர்கள் கொழுமம் துரைசாமி, வெங்கட் ராமானுஜம், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சிவசாமி, சட்ட ஆலோசர்கள் ஜோதி நாகராஜன், சீனிவாசன், மக்கள் தொடர்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் கொழுமம் தாமோதரன், குறிச்சிக் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், அருண்குமார், பிரவீன், அங்கமுத்துஉட்படதிரளானோர்கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...