யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி கோவிவில் திருக்கல்யாணம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஸ்ரீ ஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி ஆகியோர் திருக்கல்யாண கோலத்தில் பரசுராமருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மனம் உருகி ரேணுகாதேவி அம்மனை வழிபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை விழா இன்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கோவிலுக்கு அருகே உள்ள புற்றுகோவில் கம்ம குல தேவதை ரேணுகாதேவி அம்மனுக்கு நாள்தோறும் பஜனை பாடல்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து நாம சங்கீர்த்தனம்- பிருந்தாவனம் நிகழ்வும், பஜனையும் நடைபெறுகிறது.



நேற்று மாலை 5 மணிக்கு புற்று பூஜையை தொடர்ந்து பாலாற்று பூஜையும், உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில் ரேணுகாதேவி அம்மனுக்கு சக்தி அழைப்பும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை10 மணி முதல் மதியம் 1 மணி வரை பத்மாவதி தாயார் மண்டபத்தில் ஸ்ரீஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக உடுமலை திருப்பதி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பும், 2-ம் நிகழ்வாக ரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், விநாயகர் பூஜை, சுத்தி புண்யாகம், விநாயகர் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. 3-ம் நிகழ்வாக வேள்வி வளர்த்தப்பட்டு அக்னி சாட்சியுடன் ஸ்ரீஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி ஆகியோர் திருக்கல்யாண கோலத்தில் பரசுராமருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அனைவரும் மனம் உருகி ரேணுகாதேவி அம்மனிடம் கோரிக்கைகளை சொல்லி வழிபாடு செய்தனர். இதையடுத்து கோ பூஜை, கண்ணாடி தரிசனம், கன்னிகா பூஜை, ராஜ தரிசனம், தம்பதி பூஜை, தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

திருப்பதி கோவிலில் யுகாதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...