பிரதமர் மோடி வருகை: மேட்டுப்பாளையத்தில்  போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு..!

திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் அன்னூர் வந்து, அன்னூரில் இருந்து கோவை சாலை வழியாக கரியாம்பாளையம் சென்று அங்கிருந்து காரமடை வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், பாஜக வேட்பாளர்கள் - கோவை, அண்ணாமலை, நீலகிரி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொள்ளாச்சி - வசந்தராஜன், திருப்பூர்ஏ.பி.முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து, பிரதமர் மோடி காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளபொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

பிரதமர் வருகை 

இன்று மதியம் 2.20 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்துஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பொதுக் கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே ஜடையம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு பிரதமர் வரவுள்ளார்.



அங்கிருந்து பிரச்சாரம் நடக்கும் மேடைக்கு கார் மூலம் பிரதமர் வருவார் என்றும் பின்னர், பிரச்சாரம் முடிந்தவுடன் 3.30 மணிக்கு ஜடையம் பாளையத்திலிருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து நாக்பூர் புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் ஹெலிகாப்டர் வந்திரங்க ஹெலிபேடு

அமைக்கப்பட்டுள்ள இடத்தில், மூன்று ஹெலிகாப்டர்கள் வரை தரை இறங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



மேலும், ஹெலிகாப்டர் தளம் மற்றும்பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்கு

ட்ரோன்கள் பறக்க ஏற்கனவே தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து மாற்றம். 

பிரதமர் வருகையையொட்டி, மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் வழக்கம் போல மேட்டுப்பாளையம், காரமடை வழியாக கோவை செல்லலாம். இதே போல், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் ஓடந்துறை ராமசாமி நகர் வழியாக சிறுமுகை சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம்.

அதேபோல, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் அன்னூர் வந்து அன்னூரில் இருந்து கோவை சாலை வழியாக கரியாம்பாளையம் சென்று அங்கிருந்து காரமடை வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம், என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...