திருப்பூரில் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டம்-15 டன் பிரியாணி ஒரே நாளில் விற்பனை

வழக்கமாக 50 கடைகளையும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் ரம்ஜான் தினமான இன்று காங்கேயம் கிராஸ் சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ரம்ஜான் தினத்தன்று அனைத்து தரப்பு மக்களும் பிரியாணி உண்ணும் ஆசையில் ஏராளமான கடைகளில் பிரியாணி வாங்க திரண்டதால் ஏராளமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக காங்கேயம் கிராஸ் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பிரபல பிரியாணி கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பிரியாணி வாங்கி சென்றனர். வழக்கமாக அப்பகுதியில் உள்ள 50 கடைகளுக்கும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...