மூலனூரில் முருங்கை ஏற்றுமதி தொழிற்சாலை அமைக்கப்படும்-தாராபுரத்தில் ஜி.கே. வாசன் உறுதி

தாராபுரம், குண்டடம் பகுதியில் அதிகம் விளையும் சின்ன வெங்காயம், தக்காளி போன்ற பயிர்கள் விலை சரியும் காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க குளிர்சாதன கிடங்குவசதி மத்திய அரசு உதவியுடன் ஏற்படுத்தி தரப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் முருங்கை ஏற்றுமதி தொழிற்சாலை அமைக்கப்படும் என ஜி.கே.வாசன் உறுதி அளித்தார்.

ஈரோடு எம்பி தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து தாராபுரம் காந்தி சிலை முன்பு பாஜக மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது

மத்திய அரசு 10 ஆண்டுகளில் பல எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள பொதுமக்கள் மோடி அரசின் திட்டங்களால் பயன்பெற்றுள்ளனர்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையான ஈரோடு பழனி ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். மேலும் தாராபுரம், குண்டடம் பகுதியில் அதிகம் விளையும் சின்ன வெங்காயம், தக்காளி போன்ற பயிர்கள் விலை சரியும் காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவதை அறிந்து குளிர்சாதன கிடங்குவசதி மத்திய அரசு உதவியுடன் ஏற்படுத்தி தரப்படும்.



மூலனூர் பகுதியில் விளையும் முருங்கைக்காய் கொண்டு ஏற்றுமதி ரக பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் ஏற்படுத்தி தரப்படும். திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்தால் யார் மத்தியில் பிரதமர் என்று அவர்களால் கூற முடியாது. தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசருடன் பேசி பெற்றுத் தர முடியாது. தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜயகுமார் தாராபுரம் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்தவர். விவசாயத்தைப் பற்றி நன்கு அறிந்தவர். அவருக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஐந்து வினாடிகள் ஓட்டு போடுவதற்கு முன்பு யோசிக்காவிட்டால் ஐந்து ஆண்டுகள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே மத்தியில் மோடி தலைமையில் அமையும் அரசுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார். முன்னதாக ஜி.கே. வாசன் வந்தபோது தமாகா துண்டு மட்டும் அணிந்திருந்தார். அவருக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் பாஜக, பாமக துண்டுகள் வழங்கப்பட்டது. அதை அவர் கழுத்தில் அணிந்து கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...