பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகள் வெற்றியை உறுதி செய்யும் -காங்கேயத்தில் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைக்கு மக்கள் மனதிலே முதல் அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரவுண்டானா அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயகுமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாமாக பொதுச்செயலாளரும், முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான விடியல் சேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், மாவட்டத் தலைவர் ஓகே சண்முகம், மாவட்டத் தலைவர் வி.பி. சண்முகம், பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மோகனா சரவணன், வட்டாரத்தலைவர் தனபால் சாமி, மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், தமாகா நிர்வாகி அருண் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுகவிற்கு எதிர்மறை வாக்கு அதிகரித்துக் கொண்டு போகின்றது. அதனுடைய தாக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி என மக்கள் முடிவெடுத்து இருக்கின்றார்கள். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால ஆட்சியினுடைய சாதனைகள் மக்கள் திட்டங்களே எங்களுடைய வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புகின்றோம். ஈரோடு போன்ற மிக முக்கியமான தொகுதியிலே பல பிரச்சனைகள் நிலுவையிலே இருக்கின்றது. அந்தப் பிரச்சினைகளை எல்லாம் எங்களுடைய வெற்றி வேட்பாளர் மக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசுடைய உதவியோடு 100% மக்கள் பணியாற்றக்கூடிய நிலையில் உறுதியாக ஏற்படுத்துவார் என்று வாக்காளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.



தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைக்கு மக்கள் மனதிலே முதல் அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்து தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. 55 வருடங்களுக்கு பிறகு தமிழகத்திலே ஒரு நல்லாட்சி அமைய இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அடித்தளம் ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...