கோவை வீரபாண்டியில் மோடி அரசின் மளிகை பொருட்களின் விலை பட்டியலுக்கு மாலை போட்டு ஆ.ராசா பிரச்சாரம்

வரவு எட்டணா செலவு பத்தணா என்ற காங்கிரஸ் ஆட்சியில் 2014 இல் மளிகை பொருட்களின் விலை மற்றும் மோடியின் 2024 ஆம் ஆண்டு ஆட்சியில் மளிகை பொருட்களின் விலை பட்டியல் உடன் கடை அமைக்கப்பட்டு இருந்தது. அதனை பார்வையிட்டு மோடியின் விலைப்பட்டியல் அடங்கிய மளிகை பொருட்களுக்கு மாலை அணிவித்து ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். அவர் இன்று நீலகிரி தொகுதிக்குட்பட்ட கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு பேசிய ஆ.ராசா, கொரோனா காலகட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக கொரோனாவை கட்டுப்படுத்தி இந்தியாவிலேயே கொரோனாவை கட்டுப்படுத்திய முதல் முதலமைச்சர் என சான்றிதழ் பெற்றார்.



எடப்பாடி பழனிசாமி ஊதாரித்தனமாக ஆட்சி நடத்தி ஐந்து லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார். அதனை அடைத்து அதன் பிறகு குடும்பக்காடுக்கு நான்காயிரம் கொடுத்த ஒரே முதலமைச்சர். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் தருவேன் என்றார். இந்தியாவிலேயே யாரும் தராத திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தினார்.

அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் மாதம் ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார் அதையும் தந்தார். மதிய உணவை காமராஜர் கொண்டு வந்தார். அதை சத்துணவு எம்ஜிஆர் மாற்றினார். அதை உண்மையான சத்துணவாக டாக்டர் கலைஞர் கொண்டு வந்தார். அதையும் தாண்டி காலை சிற்றுண்டி வழங்கியவர் நமது முதலமைச்சர்.

வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை பெற்று கப்பல் தொழிற்சாலை, கார் தொழிற்சாலை என பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பை பெருக்கியவர் நமது முதலமைச்சர். எனவே அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வரவு எட்டணா செலவு பத்தணா என்ற காங்கிரஸ் ஆட்சியில் 2014 இல் மளிகை பொருட்களின் விலை மற்றும் மோடியின் 2024 ஆம் ஆண்டு ஆட்சியில் மளிகை பொருட்களின் விலை பட்டியல் உடன் கடை அமைக்கப்பட்டு இருந்தது அதனை பார்வையிட்டு மோடியின் விலைப்பட்டியல் அடங்கிய மளிகை பொருட்களுக்கு மாலை அணிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...