காவிரி நதிநீர் பிரச்சினை ஏன் தீர்க்காமல் உள்ளது - மத்திய அரசுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி

மத்திய அரசுதான் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் சொல்லி வருகின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு தலைப்பாகை அணிவித்து தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, மத்திய அரசுதான் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் சொல்லி வருகின்றனர். அப்படியானால் காவிரி நதிநீர் பிரச்சினையை 50 ஆண்டு காலம் ஏன் இன்னும் தீர்க்காமல் வைத்துள்ளார்கள் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் கேரளா அரசுக்கு தேவையான தண்ணீரை தமிழக அரசு வழங்கும். தமிழக அரசுக்கு தேவையான தண்ணீரை கேரளா அரசு வழங்கும் என்ற அடிப்படையில் சகோதரத்துடன் இரு மாநில முதல்வர்களும் பேச்சு வார்த்தை நடத்தி உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் திமுக ஆட்சி திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. மத்திய அரசு தேவையான அளவு நிதியை வழங்கலாம். மத்திய அரசு நிதி இல்லாமலேயே அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல் பாண்டியரு - புன்னம்பலா திட்டத்தை நிறைவேற்றவும், அதிமுக ஆட்சியில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது ஆனைமலையாரு நல்லாறு திட்டம் பாண்டியாரு -புன்னம்பலா திட்டத்தின் மூலம் தல பத்து டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிற அக்கறையும் ஆற்றலும் அதிமுகவுக்கு தான் உள்ளது. இதை வேறு யார் சொன்னாலும், அது தேர்தலுக்காக கொடுக்கும் பொய்யான வாக்குறுதி தான் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...