வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க குருமலை மற்றும் ஈசல்திட்டு மலைவாழ் முடிவு

குருமலை, ஈசல்திட்டு போன்ற பகுதிகளில் சாலை அமைப்பதற்காக டெல்லியில் இருந்து பாஜக சார்பில் உத்தரவு தற்போது வாங்கி கொடுத்த நிலையில் வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கு போவதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குரு மலை, குழிப்பாட்டி, ஈசல்திட்டு, கோடந்தூர், ஆட்டு மலை உட்பட பத்துக்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் இருந்து அவசர தேவைகளுக்கு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு குருமலையில் இருந்து காடம்பாறை, அட்டகட்டி வழியாக சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வர வேண்டிய நிலை உள்ளது.



மேலும் குருமலையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு மலைப்பகுதியில் சாலை அமைத்தால் விரைவாக உடுமலை அரசு மருத்துவமனையை அடையலாம். சாலை வசதி இல்லாத காரணத்தால் மழை கிராமங்களில் இருந்து உடல்நலம் மற்றும் கர்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனைக்கு கிராம மக்கள் தற்பொழுது வரை தொட்டில் கட்டி தூக்கி வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுவதுண்டு.

இதற்கிடையில் கடந்த 40 ஆண்டு காலமாகவே அதிமுக, திமுக அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு மட்டும் மலை கிராம பகுதிகளுக்கு வருகை புரிந்து அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றி தருவதில்லை.

இந்த நிலையில் பாஜக சார்பில் குருமலை, ஈசல்திட்டு போன்ற பகுதிகளில் சாலை அமைப்பதற்காக டெல்லியில் இருந்து உத்தரவு தற்போது வாங்கி கொடுத்த நிலையில் வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கு போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...