ஆர்.எஸ்.புரத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்க முடியவில்லை – உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பதிலடி

ஆனைமலை நல்லாறு திட்டத்தை மாநில அரசுகள் மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என்ற தவறான செய்தியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாக பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கிழவன் காட்டூர், இளைய முத்தூர், கல்லாபுரம் உட்பட முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் செய்தியாளரிடம் கூறும் பொழுது, கடந்த சில தினங்களுக்கு முன் தொண்டாமுத்தூர் பகுதியில் நாடளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு தான் போட்டி பாஜக வைப்புத் தொகை கூட பெற முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியது குறித்து கேட்டதற்கு, கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அதிமுகவிற்கு பூத் கமிட்டிக்கு ஆட்கள் போட முடியாத ஒரே கட்சி அதிமுக. ஆகையால் இவர்கள் பாஜக பற்றி குறை கூறுவதற்கு தகுதி இல்லை என பதிலடி கொடுத்தார்.



மேலும் பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைமலை நல்லாறு திட்டத்தை மாநில அரசுகள் மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என வாக்குறுதி அளித்து வருகிறார்கள். இது தவறான செய்தி. மாநில அரசுகள் தான் அமைக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், ஆனைமலை நல்லாறு திட்டத்தை பாஜக மட்டும் தான் அமைக்க முடியும்.



கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோமாவில் இருந்தாரா அப்பொழுது நிறைவேற்றி இருக்கலாமே என வசந்த ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின் போது தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், திருப்பூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் மடத்துக்குளம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், கல்லாபுரம் ஊராட்சி செயலாளர் செல்வக்கனி, கல்லாபுரம் ஊராட்சி கிளை சோமகுமார், ஒன்றிய இணை செயலாளர் மோகன், பூளவாடி கிளை செயலாளர் மாரிமுத்து, பூச்சிமேடு காளிமுத்து, இந்திரநகர் லட்சுமணன், வேல்நகர் கிளை செயலாளர் பரமேஸ்வரன், மாவளபாறை வெங்காடச்சலாம், கோபலபுரம் கிளை செயலாளர் செல்லமுத்து, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்லம்ம்மாள், உடுமலை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பட பிரிவு குமரேசன் மற்றும் பலர் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...