நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் சார்பில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் இன்று (ஏப்ரல்.15) அறிக்கையை வெளியிட்டுள்ளது.



அதில் வரும் (19.04.2024) நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் (17.04.2024, 18.04.2024) ஆகிய இரு நாட்களில் ஏற்கனவே இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 120 தனிநடைகளும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 200 தனிநடைகளும் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...