கோவை அப்பநாயக்கன்பட்டி பகுதியில் கன்னடத்தில் அண்ணாமலை பிரச்சாரம்..!

குறும்பர் இன மக்கள் அதிகம் வசிக்கும், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் அண்ணாமாலை, நான் உங்கள் சகோதரன், மோடியை பிரதமராக்க வாக்களியுங்கள் என கன்னட மொழியில் பேசி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


கோவை: கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து புறநகர் பகுதிகளான பல்லடம் மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையிலே, குறும்பர் இன மக்கள் அதிகம் வசிக்கும், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் அண்ணாமாலை, நான் உங்கள் சகோதரன், மோடியை பிரதமராக்க வாக்களியுங்கள், தாமரைச் சின்னத்திற்கு ஆதரவு தாருங்கள் என கன்னட மொழியில் பேசி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பின்னர், பாப்பம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் அண்ணாமலை,எத்தனையோ தேர்தல் நடந்திருந்தாலும் கூட, இந்தத் தேர்தல் பிரதமராக யார் வரவேண்டும் என்பதற்கான தேர்தல். பிரதமர்நாற்காலிக்கு தகுதியான ஒரே நபர் நரேந்திர மோடி தான். அவருக்கு நிகர் அவர் மட்டும்தான். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எட்டு மாதமாக இருக்கிறது .இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்று கூட சொல்லவில்லை. 

2004 ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து மன்மோகன் சிங் என்பவரை பிரதமராக சொன்னார்கள்.அதே போல இன்றும் இந்தியா கூட்டணியினர் இருக்கின்றனர்.

பிரதமர் வேட்பாளர் இல்லாமலேயே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். பிரதம மந்திரி என்பவர் முக்கியமானவர். மோடி ஆட்சியில் பத்தாண்டு காலத்தில் அனைவரையும் மையப்படுத்தி, முன்னிலைப்படுத்தி பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

10 ஆண்டுகளில் நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது.அடுத்த ஐந்தாண்டுகளில்,மூன்று கோடி வீடுகள் கட்டப்படும் என பிரதமர் சொல்லி இருக்கிறார். இன்று இந்தியாவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறோம். எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடம் கொடுக்காமல் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மோடி பலமாகும் போது, கோவை பாராளுமன்றதொகுதியும் பலமாகும். உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை அனுப்பி வைப்பீர்கள் என நினைக்கிறேன். 

பாப்பம்பட்டி பகுதியில் இருக்கும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். 920 கோடி ரூபாய் மத்திய அரசு இடங்களில் இருந்து வாங்கிக் கொண்டு கொண்டிருக்கிறோம். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கின்றனர். 

இந்தப் பகுதியில் குறும்பர் இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு காப்பீட்டு அட்டை இருப்பதைப் போல ஆடு மேய்ப்பவர்களுக்கு காப்பீட்டு அட்டை வேண்டும், கால்நடைகளுக்காக மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ஆடு மேய்ப்பவர்களின் கோரிக்கையை, ஆடு மேய்ப்பவரை தவிர யார் செய்ய முடியும். எனவே, அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். 

அடுத்த இரண்டு நாட்களுக்கு கரண்ட் ஆஃப் பண்ணிவிட்டு, வீடு வீடாக சென்று திமுகவினர்பணம் கொடுப்பார்கள். இதை 70 ஆண்டு காலமாக பார்த்து கொண்டு இருக்கின்றோம். மக்கள் எந்த நிலைமையில் இருக்கிறோமோ, அதே நிலைமையில் தான் இப்போதும் இருக்கிறோம். பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இதை இந்த முறை மாற்றி காட்டுவோம். தங்க சுரங்கத்தையே கொண்டு வந்து கொட்டினாலும் தன்மானம் இருக்கும் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...