கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இன்று (ஏப்ரல்.19) தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டில் இன்று ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிறது. ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் (ஜூன்.4) தேதி வெளியாக உள்ளது. நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மதியம் மிகவும் வெயில் இருக்கும். எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வெயில் வரும் முன்பே வாக்களிக்கச் செல்லுங்கள் என்று கூறினார்.

மேலும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். எனவே வாட்டர் பாட்டிலில் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...