முத்தூர் நகராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாக்களிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போறது உறுதி என்றும், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்வது உறுதி என்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தன்னுடைய முதல் வாக்கை குடும்பத்துடன் பதிவு செய்தார். மனைவி உமாதேவி மற்றும் சம்யுக்தா ஆகியோருடன் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போறது உறுதி என்றும், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்வது உறுதி என்றும் தெரிவித்தார்.இவிஎம் இயந்திரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது குறித்த கேள்விக்கு, தற்போது ஈபிஎம் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து இன்றைய தேர்தல் களத்தில் திமுகவினர் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...