திமுக அரசின் சாதனைகளுக்கு பெண்கள் மிக பெரிய ஆதரவு - பொள்ளாச்சியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமி பேட்டி

திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.


கோவை: தமிழக முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1715 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற வேட்பாளர் ஈஸ்வரசாமி அங்குள்ள வாக்குசாவடி அதிகாரிகளிடமும், திமுக முகவர்களிடமும் வாக்குப்பதிவு குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி, காலை 6 மணி முதல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் கடந்து 3 ஆண்டுகளாக திமுக அரசு செய்த திட்டங்களுக்கும், சாதனைக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...