நமக்கான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் - கோவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் பேச்சு

இன்றைய நாள் நமக்கான நாள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் வெள்ளிக்கிழமை இன்று (ஏப்ரல்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தினர்.



இந்நிலையில், கோவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம், கோவை லாலி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் இது குறித்து, விளையாட்டு மேம்பாட்டு துறை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் கூறுகையில், இன்றைய நாள் நமக்கான நாள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கோவை மாவட்டம் மக்கள் தொகையிலும், சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் மற்றும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம், மேம்பால பணிகள், மெட்ரோ திட்டம் என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக அனைத்து கட்சியினரும் தெரிவித்துள்ளனர். எனவே இன்றைய நாளில் நமக்கு தேவையான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...