திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 282 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நேற்று காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று இரவு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் இடப்பட்டு வாக்கு என்னும் மையமும, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையுமான திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.



இதனை தொடர்ந்து ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் முன்னிலையில் வைப்பறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 282 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் வைப்பறைகளுக்கு முன்னாள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு காவல் துறை உள்ளிட்ட மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட பகுதி வரை அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...