லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் நீலகிரி தேயிலை ஏற்றுமதி பாதிப்பு

டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரியில் தேயிலை தூள் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தூசி தர தேயிலை தூள் ஏலம் இந்த வாரம் நடத்தப்படவில்லை.

இந்த நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதால் அதிகப்படியான தேயிலை விற்பனை செய்யப்படவில்லை. மேலும், நிதிஆண்டின் இறுதி நாளான கடைசி வியாழனன்று டஸ்ட் தர தேயிலை தூள் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அதனை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஏலம் நிறுத்தப்பட்டது என குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் போஜராஜன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்து வருவதால் வரும் நாட்களிலும் அதிகப்பயான தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கமடையும் என கருதப்படுகிறது. கொள்முதலாளர்களுக்கு தேயிலை சென்றடையாமல் உற்பத்திக்கான தொகை கிடைக்காது. இதனால், தற்போது பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...