கோவை நகருக்குள் புகுந்த அரிய உயிரினமான தேவாங்கு : வன உயிரின பாதுகாப்பு குழு உதவியுடன் மீட்பு..!

கோவை உக்கடம் பகுதியில் தேவாங்கு ஒன்று இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில், பசுமை பாதுகாப்பு அமைப்பினர் அதை பத்திரமாக மீட்டு மதுக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை: கோவை, உக்கடம் பகுதியில் தேவாங்கு ஒன்று புகுந்து இருப்பதாகபசுமை பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அங்கு சென்ற பசுமை அமைப்பைச் சேர்ந்த சிநேக் அமீன், அந்த தேவாங்கை பத்திரமாக மீட்டு, மதுக்கரை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த வனத் துறையினரிடம், மீட்கப்பட்ட தேவாங்கு பத்திரமாகஒப்படைக்கப்பட்டது. 

இது குறித்து பசுமை பாதுகாப்பு இயக்கத்தினர் கூறும்போது:-

தேவாங்கு என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும். பெரும்பாலும் அடர் வனப்பகுதிகளில் மர கிளைகள் இடையே இவைகள் வாழும். 

கோவை மாவட்ட வன எல்லையான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான பாலக்காடு,மதுக்கரை போன்ற பகுதிகளில் இந்த அறிய வகை உயிரினம் காணப்படும்.தேவாங்குகளின் கண்களைச்சுற்றியுள்ள வட்ட வளையம் அவற்றைத் தனித்து அடையாளம் காண உதவுகிறது.

தற்போது, வனப்பகுதிகளில்கடும் வறட்சி நிலவுவதால்,உணவு, தண்ணீர் தேடி நகரத்துக்குள் வந்து இருக்கலாம். 

மெல்ல நகரும்.தன்மை கொண்டை இவவிளங்கு,

நாய், பூனை போன்றவற்றின் கண்களில் இருந்து தப்பித்து, நகரப் பகுதிக்குள் பத்திரமாக இருந்தது ஆச்சரியமாக உள்ளது. 

இதுபோன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வரும்பொழுது, பொதுமக்கள் அவற்றை அச்சுறுத்தாமல் வனத்துறை அல்லது வன ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) மதிப்பீட்டின்படி அச்சப்படும் அளவு எண்ணிக்கையில் உள்ள (Near Threatened) உயிரினமாக மெலிந்த தேவாங்குகள் உள்ளன. இந்திய காட்டுயிர்கள் பாதுகாப்பு சட்டம் – 1972 , பட்டியல் -1இல் இவ்விலங்கு உள்ளது. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...