கோவையில் மண் பாண்டங்கள் செய்ய போதுமான மண் கிடைக்க வேண்டும் - மண்பானை வியாபாரிகள் கோரிக்கை

கடந்த காலங்களில் போதுமான மண் கிடைத்து வந்த நிலையில், தற்போது மண் தட்டுப்பாடு அதிகரித்து விட்டது. இதனால் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் நலிவடைந்துள்ளது என்று மண்பானை வியாபாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் மண்பானைகள் தயாரிப்புக்கு மண் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், மண்பானை தொழில் நலிவடைந்து வருவதாக மண்பானை தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மண்பானை விற்பனையில் ஈடுபடுபவர்கள் இன்று கூறியதாவது, முன்பைவிட மண்பாண்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்துள்ளதால், மண் பானைகளை வாங்க அதிக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மண்ணால் செய்த பானைகளின் முக்கியத்துவம், பயன்கள் அதிகம் இருப்பதால் மண்பானைகள் விற்பனை அதிகரித்து உள்ளது. ஆனால் அதனை உற்பத்தி செய்ய போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, மண் பாண்டங்கள் செய்ய போதுமான மண் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் போதுமான மண் கிடைத்து வந்த நிலையில், தற்போது மண் தட்டுப்பாடு அதிகரித்து விட்டது. இதனால் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் நலிவடைந்துள்ளது.

மண் எடுக்க அனுமதி இருந்தும், பானைகள் தயாரிக்க மண் அள்ள முடியாத நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், மண்பானைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்படும். வரும் காலங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்க எங்களுக்கு போதுமான மண் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...